சுங்கச்சாவடிகளில் சோதனை இல்லாமல் சீறிப்பாய்ந்த லாரிகள்: மகிழ்ச்சியில் ஓட்டுனர்கள்!

LORRY2
ஒரு தேசம், ஒரே வரி அடிப்படையில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரி சட்டம் அமல்படுத்தப்பட்ட 3 நாட்கள் ஆன நிலையில் தற்போது மாநிலங்களின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இதற்கு முன்பு மாநிலம் விட்டு மாநிலங்கள் சரக்குகள் கொண்ட செல்லப்படும் போது வணிகவரித்துறை சோதனைச் சாவடிகளில் உரிய ஆவணங்களை காட்டியபின் தான் செல்ல முடியும்.
ஆனால் தற்போது நாடு முழுவதும் 22 மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன.

இதற்கு முன் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் எவ்வித தடங்கலுமின்றி செல்ல முடியும் என்பதால் டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response