விடுமுறை தினமாக இல்லாத நிலையிலும் அருவியில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

kutralm
குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இடையில் சற்று டல்லடித்த சீசன், சில நாட்களாக அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் களைகட்டியுள்ளது. இருப்பினும் கடந்த 5 நாட்களாக சாரல் இல்லை. அவ்வவ்போது மேக மூட்டம் திரண்டாலும், வெயில் அடிக்கிறது. சாரலின்றி வெயில் அடித்தாலும், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக பரந்து விழுகிறது.

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றாலத்திலும் ஓரளவு சுமாராக தண்ணீர் விழுகிறது. விடுமுறை தினமாக இல்லாத நிலையிலும், குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் நன்றாக இருந்தது. இதனால் மெயினருவியில் பெண்கள் பகுதியில் மட்டும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஐந்து தினங்களாக சாரல் இல்லாத நிலையிலும், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவது குறிப்பிடத்தக்கது. நேற்றும் மதியம் வரை வெயிலடித்த நிலையில், மாலையில் சற்று இதமான சூழல் நிலவியது. இதமான காற்று வீசியது.

Leave a Response