மருத்துவமனையில் பிறந்து 7 நாட்கலே ஆன பெண் குழந்தை கடத்தல்!

pavithra_3180860h
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மல்லிகார்ஜுனன். இவரது மனைவி பவித்ரா(23) கடந்த 22-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ மனையில் குழந்தைகள் வார்டில் பவித்ரா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை பவித்ரா தனது குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க எடுத்துச்செல்ல முயன்றார். அப்போது, அதே வார்டில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், குழந்தையை தான் மருத்துவரிடம் காண்பிப்பதாகக் கூறி, குழந்தையை வாங்கிச் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அப்பெண் வராததால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். மருத்துவமனை முழுவதும் தேடியும் அந்த பெண்ணை காணவில்லை. இதையடுத்து, மேட்டூர் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் செய்தார்.

மருத்துவமனையில் அந்த பெண் கொடுத்த முகவரி மற்றும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response