காதல் பட நடிகர் பல்லு பாபுவை மறுவாழ்விற்கு மீட்டெடுத்த திரைப்பட இயக்குனர் மற்றும் வில்லன் நடிகர் !

mohan
2004 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் தான் காதல். இப்படம் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். இப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் ஒரு சிறிய ரோல் ஒன்றில் விரூச்சக காந்த் எனும் பெயரில் அறிமுகமான நடிகர் தான் நம் பல்லு பாபு, இவர் இப்படத்தில் விரூச்சக காந்த் என்ற பெயரில் வந்த பல்லு பாபுவிற்கு இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் இருவரும் இறந்துவிட்டார்கள். உடன் பிறந்தவர்களும் அவரை தனியே ஒதுக்கிவிட்டனர். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

இவர் தற்போது சென்னையில் எழும்பூரில் உள்ள சூளை பகுதியில் ஒரு அங்காளம்மன் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்ததாகவும். இவரை நேரில் சென்று பார்த்த எமது “ஒற்றன் செய்தி” நிருபர் மூலம் இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.
பல்லு பாபு அவர்கள் அந்த கோவலில் கொடுக்கும் உணவை வங்கி சாப்பிடுவதகவும் அவர் மனநலம் பாதித்தவர் போல் பேசுவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் எமது “ஒற்றன் செய்தி” நிருபரிடம் கூறியுள்ளனர். பின்னர் பல்லு பாபுவிடம் நேரில் சென்று இதைப்பற்றி கேட்ட போது தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் நான் இந்த கோவிலில் அமர்ந்து பிச்சை எடுப்பதாக தெரிவித்தார்.

ஒற்றன் செய்தி இணையதள ஊடகத்தில் இம்மாதம் ஜூன் 23 ஆம் தேதி அன்று பல்லு பாபுவை பற்றி வெளிவந்த செய்தியின் எதிரோளியாக மற்ற பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் இந்த செய்தியை ஆராய்ந்து பல்லு பாபுவிற்கு உதவும் விதாமாக செய்திகளை வெளியிட்டனர்.

இதுபோன்று ஊடகங்களில் வெளிவந்த, பல்லு பாபுவின் செய்தியை பார்த்து படித்த பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன், மற்றும் திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் நடிகர் சாய் தீனா ஆகிய இருவரும் இன்று பல்லு பாபு பிச்சை எடுக்கும் இடத்திற்கு சென்று அவரை தங்களது இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதைப்பற்றி இயக்குனர் மோகன் மற்றும் நடிகர் சாய்தீனா அவர்கள் தங்களுடைய whatsapp, மற்றும் சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் பல்லு பாபுவை தஹ்ங்கள் இல்லத்திற்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளதாகவும், பல்லு பாபுவிற்கு பட வாய்ப்பு தருமாறு இயக்குனரகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் சாய்தீனா, மற்றும் இயக்குனர் மோகன் ஆகிய இருவரும் நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற நடிகர்களுக்கு பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response