நோக்கியா ஸ்மார்ட் போன் வாங்கினால் வோடபோனில் இலவச டேட்டா!

nokiya
நோக்கியா அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வோடோபோன் நிறுவனம் கூடுதல் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையை நோக்கியா மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ள. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 4 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படும்.

நோக்கியா 6 வாங்குவோருக்கு 9 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களுக்கு 4ஜி அல்லது 3ஜி ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. 3ஜி சேவையில்லாத வட்டாரங்களில் 2ஜி டேட்டா வழங்கப்படும்.

Leave a Response