கோவிலுக்குள் பேசிக்கொள்ளும் சாமி சிலைகள்….

silaiagal
பீகார் மாநிலம் பக்ஸார் பகுதியில் ராஜ ராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவில் 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த கோவிலில் வந்து வழிப்பட்டால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பது பக்கதர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோவிலில் இரவு நேரங்களில் மர்ம குரல்கள் ஒலிப்பதை அங்குள்ள பக்தர்கள் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆன்மிகவாதிகளுக்கும், கோவில் பெரியவர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தநிலையில் கோவிலில் உள்ள கடவுள் சிலைகள் பேசிக்கொள்வதால் தான் மர்ம குரல்கள் கேட்கிறது என்று அந்த கோவிலில் தொடர்ந்து வழிப்படும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மர்ம ஒலிகள் கருவறைக்கு வெளியில் இருந்து தான் வருகிறது என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

Leave a Response