பீகாரில் வெள்ளம் 119 பேர் பலி !

bihar-floods-bridge-collapse-caught-on-camera-19-1503111277
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழை வெள்ளத்திற்கு சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது 120 ஆக உயர்ந்துள்ளது. பாலம் உடைந்து பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

மழை காரணமாக பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள 15 மாவட்டங்களில் இருக்கும் 73.44 லட்சம் மக்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது 120 ஆக உயர்ந்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பபட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது வெள்ளப்பெருக்கில் சாலைகளும், பாலங்களும் அடித்து செல்லப்பட்ட நிலையில், பல மக்கள் உடைந்த பாலத்தின் மேல் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.

அப்போது, தாய் தனது மகள் மற்றொரு ஆணுடன் கடந்த செல்லும் போது பாலம் உடைந்து தாயும், மகளும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஆண் அதிர்ஷ்டவசமாக சாலையின் மறுபக்கம் விழுந்து உயிர் தப்பிக்கிறார். அங்கிருந்தவர்களால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உயிர்களையும் காப்பாற்ற முடியாமல் அதிர்ச்சியோடு நின்று வேடிக்கை பார்கின்றனர். இந்த காட்சியை தனது செல்போனில் ஒருவர் பதிவு செய்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response