கொச்சி மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா ஒத்தி வைப்பு…

kochi-metro
கேரளாவில், கொச்சி மெட்ரோ ரயில் சேவையை வரும், 17 ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். ஆனால், விழா மேடையில், மெட்ரோ ஸ்ரீதரனுக்கு அனுமதி தராதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவை ஏற்கனவே நடத்த கேரள மாநில அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் பிரதமர் மோடி வெளிநாடு பயணத்தில் இருப்பார் என்பதால், கேரள பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வரும், 17 ம் தேதி இந்த விழா நடக்க உள்ளது. இதற்கான விழா மேடையில், பிரதமர் மோடி, கேரள மாநில கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மட்டுமே இருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி மற்றும் கோல்கட்டாவில், மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்படுவதற்கு மெட்ரோ ஸ்ரீதரன் தான் காரணம். கேரளாவில் கொச்சி மெட்ரோ ரயில் சேவை திட்டப்பணி, 2012ல் துவக்கப்பட்டது. அப்போது அதன் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் மெட்ரோ ஸ்ரீதரன். ஆனால், விழா மேடையில் அவருக்கு இடமில்லை என்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response