வியா மூவிஸ் தயாரிக்கும் “செய் அல்லது செத்து மடி”!..

sei
வியா மூவிஸ் தயாரித்துள்ள திரைப்படம் செய் அல்லது செத்து மடி. இத்திரைப்படத்தில் போஸ் வெங்கட், ரத்தன் மௌலி , வடிவுக்கரசி, அழகு, மீசை ராஜேந்திரன் , ராஜதுரை, சிம்மா, சரத்,ஆகியோரும், நாயகிகளாக பெங்களூர் மாடல் அழகிகள் தீப்தி, பிரியங்கா மல்நாட் ஆகியோர் நடித்துள்ளனர். இசை – வேலன் சகாதேவன் , எடிட்டிங் – கோபாலகிருஷ்ணன், வினோத்., பாடல்கள் – பூமி, நடனம் – சிவா, ராக் ஷங்கர், சண்டை பயிற்சி சென்சாய் சேஷு, இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் வி கே பூமி..

செய் அல்லது செத்து மடி திரைப்படத்தை பற்றி இயக்குநர் பூமி கூறியாதாவது:-

இத்திரைப்படம் ஒரு ஆக்க்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. மனிதனாய் பிறந்த ஒருவருக்குள்ளேயும் ஒரு நல்லவன், ஒரு தீயவன் உள்ளான். நல்லவன் வழியில் கெட்டவன் போனா நன்மை, அதுவே அவன் தடம் மாறினால் அவன் வாழ்க்கை டு ஆர் டை என்ற வசனத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இப்படத்தின் கதை. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு முடிந்தது, இத்திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 12.01மணிக்கு யூடியூப் ல் வெளியிடப்படவுள்ளது.

Leave a Response