இரவில் போலீஸ்காரர்கள் செய்யும் அட்டுழியம்: பதறும் பொது மக்கள்

boli
இருசக்கர வாகனத்தை நிறுத்தி, மாமூல் கேட்பதும், தடுத்தால் வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டு மிரட்டுவதும் தமிழக போலீசாரின் வழக்கமான செயலாக உள்ளது.

இரவு நேரத்தில் வாகனங்களில் வெளியே செல்லும் பொது, தமிழக போலீசார் எங்கேனும் ஓரமாக நின்றிருக்கிறார்களா என்ற அச்சத்திலேயே செல்வது வழக்கம். காரணம், தங்களை எப்படி நடத்துவார்களோ என்ற அச்சம்தான்.

சந்தேகப்படுபவர்களை பிடித்து வைத்துக் கொண்டு, குடிபோதையில் இருக்கிறீர்களா, எங்கே சென்று வருகிறீர்கள் எனப் பல கேள்விகளை கேட்டு டென்சன் செய்கிறார்கள். பொதுமக்கள் டென்ஷன் ஆகி, கேள்வி கேட்கும்பட்சத்தில் உடனே, வண்டி சாவியை பிடுங்கிக் கொள்வதும், அதனை கேட்டால், நீண்ட நேரம் அலைய விடுவதுமே வாடிக்கையாக உள்ளது தமிழக போலீசாருக்கு .

இப்படித்தான், மதுரை தல்லாக்குளம் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து, சாவியை பிடுங்கிக் கொண்டு, அலையவைத்துள்ளார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், நீண்ட நேரம் இழுக்கடிக்கச் செய்த போலீசாரை, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்த போலீசாரை வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் சிறிது நேரம் கழித்து சாவியை திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Response