“கதாநாயகன்” ஜூன் 23-ல் வெளியீடு இல்லை ட்விட்டரில் அறிவித்த விஷ்ணு விஷால்…

kadhaa
மாவீரன் கிட்டு’ படப்பணிகளை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் விஷ்ணு விஷால்.

‘கதாநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது, ஜூன் 23-ம் தேதி பல்வேறு படங்கள் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால் ‘கதாநாயகன்’ வெளியீடு இல்லை என விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேத்தரீன் தெரசா, சூரி, விஜய சேதுபதி உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார்கள். விஷ்ணு விஷாலே தயாரித்துள்ள இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

‘கதாநாயகன்’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கத்தில் உருவாகும் ‘மின்மினி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.

Leave a Response