ஜூலை 1ல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி!..

GST_06532
நம் நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அதை பார்லியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

தொடரந்து பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களையும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே ஜி.எஸ்.டி., அமலாகும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகளில் மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, தமிழக எதிர்க்கட்சி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தி என தெரிவித்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Response