மாடியில் இருந்து வீசப்பட்ட கை குழந்தை

serumi
ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று முன்றாவது அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 3வது மாடியிலிருந்து குழந்தை ஒன்று கீழே வீசப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை
பார்த்த ஒருவர் குழந்தையை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.

பகதூர்புரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் உயரத்திலிருந்து விழுந்ததால் அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது என்பது சற்று கடினம் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதைபதைக்கச் செய்யும் இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்ப்படுத்தயுள்ளது உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response