இயற்கை பழங்களின் பயன்கள்…

palam
இன்றைய வாழ்வின் தரத்தை குறைக்கும் வண்ணம் நம்ம ஊரில் ஏகப்பட்ட செயற்கை விஷயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இயற்கை பழங்களை உன்னால் எவ்ளோ பயன் என்று பாக்கலாம் வாருங்கள்.

சப்போட்டா:

இது சருமம் பொலிவடைய செய்யும் தன்மை கொண்டது. வைட்டமின் ஏ நிறைந்தது. கண்களுக்கு சிறந்தது. உடல் எடையை குறைக்க உதவும். சிறந்த பழம் மட்டுமின்றி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது.

செவ்வாழை:

வைட்டமின் பி6 நிறைந்தது. இதை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் சுறுசுறுப்படையும். நெஞ்செரிச்சலை போக்கும் தன்மை கொண்டது. வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் சிறந்தது.

முலாம்பழம்:

அல்சரை போக்கும் உயர்ந்த தன்மை கொண்டது. உடல் எடை குறைக்க உதவும். மலச்சிக்கலை போக்கும் குணம் கொண்டது. கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற பழம். இதனை ஜீஸ் ஆக்கி சாப்பிடும் போது உடல் வலிமை பெறுகிறது.

ஆரஞ்சுப்பழம்:

ரத்தக் கொழுப்பை குறைக்கும். சிறுநீரக கோளாறு வராமல் தவிர்க்க உதவும். இதயத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் பழச்சாறில் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது.

பப்பாளி:

ரத்த கொழுப்பை குறைக்கும். நீரிழிவு மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு மிகவும் சிறந்தது. இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் கண்களுக்கு சிறந்ததாகும்.

Leave a Response