அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு…

ttv
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அந்நிய செலவாணி மோசடி வழக்கு, இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதை பார்த்ததும் என் எதற்கு என்று கேள்வி எழுந்திருக்கும். வாங்க என்னனு தெரிஞ்சிப்போம்.

அதாவது 1996-ல் ரூ.45.31 கோடி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அமலாக்கத்துறை தினகரன் மீது 2 வழக்குகளை பதிவு செய்தது. இருபது வருடங்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் தினகரனை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தினகரனை விடுவித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அத்துடன் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டுமென்றும் எழும்பூர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்தது.

அதன்படி இன்று இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதின்றத்தில் நேரில் ஆஜரான தினகரன், தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அத்துடன் அவர் மீது கொடநாடு எஸ்டேட் நிறுவன பங்குகளை போலி நிறுவனம் மூலம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடன் நீதிபதி மலர்வதி வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Response