“போங்கு” திரைவிமர்சனம்…

bongu
தேஜ் இயக்கத்தில் ரகுக்குமார் தயாரித்து நட்டி, ருஹி சிங் நடித்துள்ள படம் தான் போங்கு.
மேலும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை என்ன வென்றால் ஒஸ்தியான கார்கள் விற்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் நண்பர்கள் நட்டி, ரூஹி மற்றும் அர்ஜுன். எம்பி மகளுக்கு அந்த நிறுவனத்திலிருந்து ஒரு கார் சப்ளை செய்யப் போகிறார்கள் நட்டியும் அர்ஜுனும். வழியில் சிலர் அந்தக் காரை கடத்திவிடுகிறார்கள். நிறுவனத்துக்கு நட்டி, அர்ஜுன் மீது சந்தேகம். அதனால் ஜெயிலில் தள்ளிவிடுகிறார்கள். சிறையிலிருக்கும் இருவரையும் ரூஹி வெளியில் எடுக்கிறார். ஜெயில் அனுபவத்தை வைத்துக் கொண்டு கார் கடத்தலில் இறங்குகிறார் நட்டி. நண்பர்கள் துணை நிற்க முதல் திருட்டிலேயே கோடிகளில் பணம்.

இந்நிலையில் ஒரு அசைன்மென்ட் கிடைக்கிறது. மதுரை தாதா சரத் லோஹிதஸ்வாவிடம் உள்ள 10 காஸ்ட்லி கார்களைத் திருட வேண்டும். உடனே மதுரைக்குக் கிளம்புகிறார் நட்டி அவரது நண்பரகளுடன். அங்கே பார்த்தால், பத்து கார்களில் ஒன்றாக தங்களிடமிருந்து கடத்தப்பட்ட காரும் நிற்கிறது. இதன் பின் என்ன செய்கிறார் கதையின் நாயகன் நட்டி என்பதுதான் படத்தின் மீதி கதை.

அதே நட்டி படபடப்பு பேச்சு, ரஜினியை நகலெடுத்த மாதிரி உடல் மொழி. வில்லன் சரத் லோஹிதஸ்வாவுக்கு மிரட்டலான ரோல் கச்சிதமாக பொருந்திருக்கார். இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் நன்றாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசை பாடல்கள் ஓகே, வசன காட்சிகளில் பின்னணி இசை அதிக சத்தங்களை எழுப்பி எரிச்சலூட்டும்படி அமைந்துள்ளது. படம் ஆக மொத்தத்தில் நன்றாக உள்ளது. பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால் ஒரு முறை பார்க்கலாம்

Leave a Response