மொபைல் இண்டர்நெட் பயன்பாடு இந்தியாவில் பலமடங்கு அதிகரித்துள்ளது…

mobileapps-tablet
இதுவரை நம் இந்தியாவில் மொபைல் போன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வரவு மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களின் சலுகைகள் காரணமாக இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி மார்ச் 2017 வரை மட்டும் 130 கோடி ஜிகாபைட் டேட்டாவினை இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டில் 15 கோடி ஜிகாபைட் டேட்டாவினை பயன்படுத்தியுள்ளனர் என இண்டர்நெட் டிரென்ட்ஸ் 2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, டேட்டா சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற நிறவனங்களும் தங்களின் டேட்டா விலையை மாற்றியமைத்து, புதிய சலுகைகளை வழங்கத் துவங்கின.

முன்பு வழங்கப்பட்டதை விட குறைவான விலையில் டேட்டா வழங்கப்பட்டதே மொபைல் போன் டேட்டா பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 35 கோடி பேர் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
mobile-internet

Leave a Response