“பிருந்தாவனம்” திரை விமர்சனம்…

brindA
மொழி”, “அபியும் நானும்” போன்ற படங்களை இயக்கிய ராதாமோகனின் எழுத்து, இயக்கத்தில், “வான்சன் மூவிஸ் “ஷான் சுதர்ஸன் தயாரித்து விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். அருள்நிதி, விவேக், தன்யா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், செல் முருகன், டவுட்டு செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம்தான் “பிருந்தாவனம்”.

சின்ன வயதிலேயே விபத்தொன்றில் தன் காது கேட்கும் திறனையும், வாய் பேசும் திறனையும், கூடவே தனது பெற்றோரையும் இழந்து அனாதையான சிறுவன். இவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனது அபிமான காமெடி நடிகரை எதிர்பாராமல் அவன் சந்தித்து, தக்க தருணத்தில் சில உதவிகள் நடிகருக்கு இவன் செய்ய, அதற்கு கைமாறாக அந்த நடிகர் தன் ரசிகனை விரும்பும் பெண்ணோடு தடைகள் பல கடந்து சேர்த்து வைப்பதோடு, அவன் இல்லற வாழ்க்கை, இனிதே வாழ வைப்பது தான் “பிருந்தாவனம்” இதுதான் படத்தின் கரு.

கதை, களம், காட்சிப்படுத்தல் என்று எல்லாவற்றிலும் கட்சிதமாக இருக்கின்றது. இப்படத்தில் நிறைய காமெடி, கொஞ்சம் காதல், கொஞ்சம் சோகம், கொஞ்சம் சென்டிமென்ட் எல்லாம் கலந்து படத்தை ஜனரஞ்சமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன் அதற்காக அவரை பாராட்டலாம். இப்படத்தில் அருள்நிதி நடிப்பை பாராட்டியே ஆகணும் அவ்ளோ அழகாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் சோகமாக காண்பித்து கண்களில் கண்ணிர் வர வைத்துள்ளார். அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தி உள்ளனர்.

எல்லாரும் குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது ஏனென்றால் இப்பொழுதெல்லாம் குடும்பங்கள் பார்க்கின்ற மாதிரியான படம் வருவதில்லை எனவே அனைவரும் சென்று பாருங்கள்.

Leave a Response