“முன்னோடி” திரை விமர்சனம்…

munnodi
இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். கே.பிரபு ஷங்கர் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் கதாநாயகனாக ஹரிஷ், கதாநாயகியாக யாமினியும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை என்னவென்றால் தந்தை இழந்து இருக்குழந்தைகளுடன் இருக்கும் தாய். அதில் மூத்த பையனாக ஹரிஷ் இருக்கிறார். சின்ன பையனாக வரும் குழந்தைக்கு அறிய வகை நோய் ஒன்று இருக்குகிறது என்பதால் அம்மா அவனை பாசத்துடன் வளர்க்கிறார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த ஹரிஷ். வெறுத்து போய் ஒரு ரவுடி கும்பலுடன் சேர்க்கிறார். பின்னர் பெரியா ஆளாகிறார்.
இந்நிலையில் கதாநாயகியை பார்க்கிறார் காதலில் விழுகிறார்.

அவர் பின்னாலேயே போய் விசாரிக்க, விசாரிக்க.. அவரும் தன்னுடைய தம்பியும் ஒரே வகுப்பில் படித்து வருவது தெரிகிறது. தான் காதலிக்கும் ஹீரோயின் தனது தம்பியை விரும்புவதாகச் செய்தி வர கோபம் கொள்ளும் ஹீரோ தம்பியை கொலை செய்ய போகும்போது காதலியும், தம்பியும் பேசிக் கொள்வதை கேட்க நேரிடுகிறது. தம்பி தன் மீது வைத்திருக்கும் உண்மையான பாசத்தை உணரும் அண்ணன் ஹரீஷ், தம்பியை புரிந்து கொள்கிறார். அம்மாவுடன் இணைகிறார் மற்றும் பாசமான, பொறுப்பான அண்ணனாகிறார்.

இந்நிலையில் தான் இருக்கும் கும்பலிடம் இருந்து விலக நினைக்கிறார். இதனால் என்ன நடக்கிறது. இறுதியில் காதல் வெற்றி பெற்றதா ரவுடிகளிடம் இருந்து தப்பித்தாரா என்பது மீதி கதை.

இப்படம் திரையரங்கம் சென்று தாரளமாக பார்க்கலாம் அவ்ளோ கட்சிதமாக கதாபத்திரங்கள் பொருந்தியுள்ளது. துணை கமிஷனர் ஷிஜாய், மந்திரமூர்த்தியாக நடித்த அர்ஜூனா, இவரது மைத்துனரான பாவேல் இவர்கள் அனைவரும் தங்களது கதாபத்திரங்களை மிக சிறப்பாக நிறைவு செய்துள்ளனர்.

Leave a Response