கழுத்தில் கருவளையம் மற்று சுருக்கங்கள் போகவேண்டுமா இதோ உங்களுக்கான டிப்ஸ்…

tips
மனித உடலில் தலைப் பகுதியையும், உடலையும் இணைக்கும் முக்கிய பகுதியாக கழுத்து திகழ்கிறது. அதில் ஏராளமான ரத்த குழாய்களும், நரம்புகளும் செல்கின்றனர். கழுத்து பகுதிக்கு சிறிது உடற்பயிற்சி அளிப்பதன் மூலம் வலிகள் இன்றி காக்க முடியும். அதேபோல் கழுத்துப் பகுதியின் தோலை நாம் கவனிக்காவிடில் நிறம் மாறி, கடினத் தன்மை கொண்டதாக மாறிவிடும். அதனை பேணுவதற்கான சில எளிய முறைகளை இங்கே காணலாம்.

கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றி பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு தினமும் செய்தால் கழுத்தின் கருவளையம் நீங்கும். சூடான நல்லெண்ணைய்யால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் சுருக்கம், கறுப்பு வளையம் நீங்கும்.

Leave a Response