அரைக்கீரையில் உள்ள அதிசய மருத்துவ பயன்கள்…

arak
அரைக்கீரையில் இருக்குற மருத்துவப் பயன்கள் தெரிஞ்சா சாப்பிடாமல் இருக்க மாட்டீங்க. வாங்க அது என்னனு பாப்போம்.

1. அரைக் கீரையுடன், சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

2. அரைக்கீரையுடன், மிளகாய் வற்றல், சிறு பருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து, காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.

3. அரைக்கீரைத்தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுறையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.

4. அரைக்கீரையை சிறு பருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை மறையும்.

5. அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

Leave a Response