முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு : மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு…

edappadi
முதல்வர் எடப்பாடி குடுத்த அதிரடி உத்தரவு பத்தி தெரிஞ்சிக வாங்க முழுசா படிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஆண்டுகள் வரை 3 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு சதவீதம் உயர்த்தி, தற்போது 4 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.

இதன்மூலம் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதம், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதம், கை மற்றும் கால் சம்பந்தமான குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு சதவீதம், மனநலம் குன்றியோருக்கு ஒரு சதவீதம் என குறிபிட்டுள்ளார்.

இதன் மூலம் அரசு பணி, பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என தெரிகிறது.

அதேபோல் அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மற்றும் வயது மூப்பு அடிப்படையில் பணிக்கான ஆணை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Response