ரம்ஜான் நோன்பு நாளையிலிருந்து தொடங்க இருக்கிறது…

nonbu
நமக்கு முஸ்லிம் நியாபகம் வருகிறது இரண்டு விஷயம் ஒன்னு பிரியாணி இன்னொன்னு நோன்பு. ஆமாங்க அவங்க இருக்குற நோன்பு அவ்ளோ அற்புதமா இருக்கும். வாங்க அத பத்தி படிப்போம்.

அதாவது இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள்.

இந்தியா முழுவதும் ரம்ஜான் நோன்புக்கான பிறை நேற்று தென்படாததால், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இதற்காக, அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை இன்று முதல் தொடங்கும் என தலைமை ஹாஜி அறிவித்தள்ளார்.

மேலும், நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் “ஷஹர்” என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

Leave a Response