ஆட்சியை கலைக்க வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதத்தில் டிராபிக் ராமசாமி !

traffic
தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அணிகள் இணைப்பு, பிளவு என இந்திய அளவில் தமிழக அரசியல் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இலந்து விட்டதாக 19 சட்டமன்ற உறுப்பினா்கள் ஆளுநாிடம் மனு அளித்துள்ளனா். இதனை தொடா்ந்து அரசு தனது பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிா்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது திடீர் போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, தமிழகத்தில் பெரும்பாண்மை இல்லாத மைனாரிட்டி அரசு நடப்பதாக குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய வில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகம் அல்லது ஆளுநர் மாளிகை முன்பு எனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என்று கூறினார். டிராபிக் ராமசாமி எந்த இடையூறும் இல்லாமல் தனது அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Response