சண்டிகரில் சிறுமியின் பிறப்புறப்பில் நாணயத்தை நுழைத்த இளைஞன் கைது…

naanaiyam
ஹரியானா மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த தம்பதியருக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவரும் அருகிலுள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள் என்பதால், பெரும்பாலான நேரங்களில் அந்த குழந்தை வீட்டில் தனியாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த குழந்தை வீட்டில் தனியாக இருந்த போது, அருகில் வசிக்கும் 21 வயது இளைஞன் ஒருவர், அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

யாரும் இல்லாத வீட்டில் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் தீக்குச்சிகள், ரூபாய் நாணயங்கள், பஞ்சு ஆகியவற்றை திணித்து கொடுமை செய்துள்ளான். இந்த கொடுமைகள் அனைத்தையும், தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் அந்த குழந்தை கூறியுள்ளது.

குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்,உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர் அந்த குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, அந்த காமக் கொடூரனை கைது செய்தனர்.

அந்த இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் தாயை பழிக்குப் பழி வாங்கவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

Leave a Response