இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை…

pokkuvaraththu
ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சு இன்று நடக்கிறது. இதில், உடன்பாடு ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஸ்டிரைக்’:

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 2.43 லட்சம் ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சை நடத்தி இருக்க வேண்டும். அரசியல் குழப்பங்களால், இந்த பேச்சு தள்ளிப் போனது. தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்த நிலையில், மார்ச், 7ல் துவங்கி, ஆறு கட்ட பேச்சு நடந்தது; ஆனாலும், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், மே, 14 முதல், மூன்று நாட்கள், போக்குவரத்து ஊழியர்கள், ‘ஸ்டிரைக்’ நடத்தினர்.

பேச்சுவார்த்தை:

இந்நிலையில், இன்று காலை, 10:00 மணிக்கு, குரோம்பேட்டையில் உள்ள, மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், ஏழாம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சு நடக்க உள்ளது. இதில், போக்குவரத்து துறை செயலர் உள்ளிட்ட, குழுவினர் பங்கேற்கின்றனர். தொழிற்சங்கங்கள் சார்பில், இருவர் பங்கேற்கின்றனர். ஸ்டிரைக் நடந்த போது, மூத்த அமைச்சர்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்பட்டது போல, இன்றைய ஊதிய ஒப்பந்த பேச்சிலும் உடன்பாடு ஏற்படும் என, அரசு பஸ் ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Response