தமிழக அரசின் அரசாணை வெளியீடு: +1,+2 தேர்வு முறையில் முழுவதுமாக மாற்றம்…

exam182173
தமிழக கல்வித்துறை கடந்த சில நாட்களாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு என்று அறிவித்தார்.

தேர்வு எழுதுவதற்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து, 2.30 மணியாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு பாடத்திட்டங்களை மாற்ற தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகளின் மூலம் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார். அதற்காக பள்ளி வேலை நாட்களில் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேவைக்கேற்ப முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர்களாக தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Leave a Response