இன்று காலை வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..!

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.

கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.

tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

எப்போதும் போல இந்த அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை அளித்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

Leave a Response