மும்பை – கோவா இடையே இயக்கப்பட உள்ள அதி நவீன தேஜாஸ் ரயில் பெட்டியின் ஜன்னல் சேதம்…

ani
மே, 22ம் தேதி முதல் மும்பை – கோவா இடையே இயக்கப்பட உள்ள அதி நவீன தேஜாஸ் ரயில் பெட்டியின் ஜன்னலை விஷமிகள் சிலர் சேதமடைய செய்துள்ளனர்.

இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்படுகிறது. இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் தலா 72 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. வைஃபை இன்டர்நெட் வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன.ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பெட்டிகள் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டிகள்தான் இந்தியாவின் அதிவேகத்தில் செல்லும் திறன் பெற்ற ரயில் பெட்டிகளாகவும் கூற முடியும். இந்த ரயில் நேற்று டில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட போது விஷமிகள் சிலர் ஒரு ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response