அரசு பள்ளி மதிய உணவில் பாம்பு !! அலறி அடித்து ஓடிய மாணவிகள்…

sneek
நம் நாட்டில் வறுமை கோட்டில் வாழும் மக்கள் அனைவரும் கல்வி அறிவும் பெற வேண்டும் அதே நேரத்தில் வயிறும் நிறைய வேண்டும் என்று அப்பொழுதே கர்ம வீரர் காமராஜர் கொண்டு வந்த திட்டம்தான் மதிய உணவு திட்டம். இத்திட்டம் அனைவரின் வயுரையும் மற்றும் மனதையும் நிரம்ப செய்தது.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள ராஜ்கேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது மாணவி ஒருவரின் உணவில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதைக் கண்ட மாணவிகள் உணவை வைத்து விட்டு அலறி அடித்து ஓடினர். சிலர் தங்கள் மதிய உணவை உண்டதால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த உணவை இஸ்க்கான் தொண்டு நிறுவனம் பள்ளிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. உடனடியாக சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Response