சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு : நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை…

karnan
நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர். கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருக்கார் என்றால் அது நம் நீதிபதி கர்ணன்தான் இப்பொழுது அவருக்கு சுப்ரீம் கோர்ட் 6 மாத சிறை தண்டனை அளித்துள்ளது.

அத்தண்டனை எதற்கு என்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேரும் தமது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பைத்தியக்கார நீதிபதிகள் என்றும் வர்ணித்தார். இதனால் கோர்ட் வட்டாரத்தில் பரப்ப்பு ஏற்பட்டது.

இதனிடையில் நீதிபதி கர்ணனுக்கு மே 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. டாக்டர்கள் குழு அவரது வீட்டுக்கு சென்ற போது நீதிபதி கர்ணன் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்து விட்டார்.

மீடியாக்களுக்கும் தடை இதனையடுத்து மன நல பரிசோதனைக்கு ஒத்துழைக்காதது கோர்ட்டை அவமதிப்பதாகும் என அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட மீடியாக்களுக்கு தடையும் விதித்தது. பணியில் உள்ள நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நீதிபதி கர்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response