110-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி: கிருஷ்ணகிரி…

krishnagiri
கிருஷ்ணகிரியில் 110-ஆவது பிறந்த நாளை தனது வாரிசுகளுடன் கொண்டாடிய மூதாட்டியிடம் அனைவரும் ஆசி பெற்று சென்றனர். கிருஷ்ணகிரி செந்தில் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர், கடந்த 1947-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

முனுசாமியின் மனைவியான லட்சுமியம்மாளுக்கு அப்போதைய வயது 45. இவரது ஒரே மகன் தன்ராஜ். மருமகள் சரோஜா (94). இந்த தம்பதிக்கு 5 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், லட்சுமியம்மாள் தனது 110-ஆவது பிறந்த நாளை உறவினர்களுடன் கேக் வெட்டி நேற்று கொண்டாடினார்.

பின்னர் தனது மருமகள், பேரன், பேத்திகளுக்கு கேக் ஊட்டினார். தளராது உழைப்பு, சைவ உணவு, இனிப்பு சுவை மட்டுமல்லாமல் கசப்பு, துவர்ப்பு போன்ற சுவைமிக்க உணவுகளை உண்பது தனது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும், தனது தேவைகளை தானே செய்வதால் நீண்ட நாள் வாழ உதவுவதாக அவர் தெரிவித்தார். அவரது பிறந்த நாள் விழாவில் 74 பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள், எள்ளு பேரன், பேத்திகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Response