விஞ்ஞானத்தின் அற்புதங்கள்….

space_saturn
இன்று நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது ஒரு பக்கம் மனதிற்கு கவலையாக இருந்தாலும். மறுபக்கம் விஞ்ஞானத்தை பார்த்தல் ஆச்சர்யம் பட வைக்கிறது. ஏனென்றால் என் பாட்டி நிலவை பார்த்து சோறு ஊட்டிய காலம் போய் இப்பொது அந்த நிலவிலே போய் சோறு சாப்டுவிடலாம் போல அவ்ளோ விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து உள்ளது. என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

அதாவது என்ன வென்றால் சனிக் கிரகத்தைச் சுற்றியிருக்கும் நிலாக்களில் ஒன்றான ‘இன்சிலாடஸ்’ என்ற நிலாவில் உயிரினங்களுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலாவிலுள்ள கடல்படுகையில் காணப்படும் திரவத் துவாரங்கள் உயிரினங்களின் தோற்றங்களுக்கு ஆதாரமாக அமையும் என்றும். ஏனெனில் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு கடல் படுகைத் துவாரங்கள் அடிப்படையாக இருந்துள்ளன என்றும் விஞ்ஞானி டாக்டர் ஹண்டர் வெய்ட் தெரிவித்தார்.

ஒன்றுமட்டும் நிச்சயம். இன்சிலாடஸ் நிலாவிலுள்ள கடல்கள் உயிரினங்களின் இருப்புக்கு மூலதாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது. இதுகுறித்து இன்னும் தீவிர ஆய்வுகளுக்கு இன்சிலாடஸ் நிலா மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று விஞ்ஞானி ஹண்டர் சொன்னார்

Leave a Response