அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் “ஏன்டா தலைல எண்ண வெக்கல”

endaa
அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி வரவிருக்கும் படம் “ஏன்டா தலைல எண்ண வெக்கல” இவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்.இப்படத்தை இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஏ.ஆர். ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் தயாரித்து இசையமைத்துள்ளனர்.

புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படத்தின் இசை சென்னையில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பாக்யராஜ் இசையை வெளியிட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பெற்றுக் கொண்டார்.

நான் டொரோண்டோ போனபோது எனக்கு கிடைத்த அறிமுகம் தான் சுபா மேடம். ஒரு படம் தயாரிக்கணும், டைரக்டர் தேர்வு செய்ய சொன்னார். அப்படி உருவான படம் தான் ‘ஏண்டா தலைல எண்ண வெக்கல’. இந்த வெயில் சீசன்ல எல்லா வீட்லயும் கேக்குற ஒரு கேள்வி ‘ஏண்டா தலைல எண்ண வெக்கல’. எல்லோரும் தலைக்கு எண்ண வெச்சிட்டு போங்க, உடம்புக்கு நல்லது என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா.

கலா மாஸ்டரிடம் 3 ஆண்டுகள் டான்ஸ் கற்றுக் கொண்டவன் நான். இன்னும் டான்ஸில் நிரூபிக்கவில்லை, இனி தான் என் ஆட்டம் இருக்கப் போகுது. கஷ்டப்பட்டு படம் தயாரிக்கிறவன் ஒருவன், ஆனா அதை கேபிள் டிவி, பஸ் என எல்லாவற்றிலும் முதல் நாளே திருட்டுத்தனமாக ஒளிபரப்புகிறார்கள்.

இனி அதை ராணுவ கட்டுப்பாட்டோடு ஒடுக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். மத்திய அரசின் உதவியோடு திருட்டு இணைய தளங்களையும் முடக்க போகிறோம். சினிமாவுக்கு சில விதிவிலக்குகள் வேண்டும், சினிமாவில் விலங்குகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விலங்குகளை நாங்கள் யாரும் துன்புறுத்தப் போவதில்லை என்றார் நடிகர் மன்சூர் அலிகான்.

திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவர்கள். படத்தின் நாயகன் அசார் நல்ல இடத்துக்கு நிச்சயம் வருவார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சினைகள் ஓய்ந்து நல்ல எல்லா தயாரிப்பாளர்களும் படம் தயாரிக்க ஏற்ற நல்ல சூழ்நிலை கூடிய விரைவில் வரும் என்றார் இயக்குனர் பாக்யராஜ்.

இப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகளாக இருக்கும். ரெஹானா மேடம் உண்மையை முகத்துக்கு நேரே பேசக்கூடியவர். எனக்கும், ரெஹானா மேடத்துக்கும் இடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும். சஞ்சிதா ஷெட்டி தான் ஒரு சீனியர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் நடித்துள்ளார். மேலும் மன்சூர் அலிகான் அவர்கள் மனதளவில் ஒரு குழந்தை என்றார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

மேலும் இவ்விழாவிற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி, டான்ஸ் மாஸ்டர் கலா, சிங்கப்பூர் தீபன், எடிட்டர் சி.எஸ்.பிரேம், நாயகன் அசார், நாயகி சஞ்சிதா ஷெட்டி, ஒளிப்பதிவாளர் வம்சிதரன், நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராமன், ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Leave a Response