இளம் இயக்குனர்களுக்கு சூசகமாக சூடு கொடுத்த இயக்குனர் எழில்…

Ezhil in SIBY Press Meet
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. ஏற்கனவே டி.இமான் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இத்திரைப்படம் இம்மாதம் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அனைவரும் பேசினார்.

இந்த நிகழ்வின் பேசிய படத்தின் இயக்குனர் எழில் கூறியதாவது, இமான் ஒரு உணவுப்பிரியர். கம்போஸிங்குக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடம் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம் என்று கூறினார்.

இப்போது இருக்கும் புது இயக்குனர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குனர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். நம்முடைய முன்னோர்களை பற்றி நாம் மறந்து சென்றுவிட்டால் அது இன்டஸ்ட்ரிக்கு பெரிய தவறாக இருக்கும். நம்முடைய முன்னோர்கள் வகுத்து கொடுத்துள்ள பாதையில் தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம், அவர்கள் செய்து முடித்ததை தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என கூறினார். எனவே இளம் இயக்குனர்கள், மூத்த இயக்குனர்களுக்கு மதிப்பளித்து செல்ல வேண்டும் என்பதை தான் கோரிக்கையாக விடுப்பதாக சொல்லி, இளம் இயக்குனர்களுக்கு சூசகமாக சூடு கொடுத்துவிட்டு சென்றார் இயக்குனர் எழில்.

Leave a Response