தூங்கிய பயணி: அபராதம் செலுத்திய இரயில்வே…!

train
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் கார்க். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு கோவை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.

இவர் கோட்டா என்ற ரயில் நிலையத்தில் இறங்க முன்பதிவு செய்திருந்தார். இதற்காக ரயில்வேயில் உள்ள அலர்ட் என்ற வசதியை பயன்படுத்தியுள்ளார். 139 என்ற ரயில்வேயின் வாடிக்கையாளர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, கோட்டா ரயில் நிலையம் வந்தால் அலர்ட் செய்து எழுப்பி விடவும் என கூறியுள்ளார். அதற்கு சேவை மையம் சார்பில் சம்மதம் தெரிவித்தனர்.

இருப்பினும் கோட்டா ரயில் நிலையம் வந்த போதும் கூட எந்த ஒரு அலர்ட்டும் ரயில்வே சார்பில் செய்யவில்லை. கடைசியில் சுதாரித்து ரயில் கிளம்பும் போது ஒரு வழியாக அவசர, அவசரமாக இறங்கி உள்ளார்.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் மீது கிரிஷின் தொடந்த வழக்கில், ரயில்வே 20,000 எனக்கு தரவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ரயில்வே கூறியிருந்தது. விசாரணையின் முடிவில் கிரிஷ்க்கு 5,000 ரூபாய் இழப்பீடாக தரவேண்டும் என்றும், வழக்கு செலவு ரூ. 2000 சேர்ட்த்து 7000 ரூபாய் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Response