எஜமானை வணங்கிவிட்டு செல்லும் பருந்து..!

anilkumaar
பொள்ளாச்சியில் பருந்து ஒன்று தன்னுடைய உயிரை காப்பாற்றிய எஜமானை தினமும் வணங்கிவிட்டு செல்கிறது.

பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளி அனிலுமார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் கள் பானையை இறக்கி கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு சிறகு ஒடிந்து காலில் அடிபட்ட நிலையில், பறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தது.

அதனை தன் வீட்டிற்கு கொண்டு வந்த அனில்குமார், அதன் காயங்களை குணமாக்கி 3 மாதங்களுக்கு தன் வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். பின்னர் காயம் குணமடைந்த பருந்து காட்டுக்குள் பறந்து சென்று விட்டது. அதனைத் தொடர்ந்து தன்னை காப்பாற்றிய அந்த எஜமானை பார்ப்பதற்கு தினமும் காலை 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள் அவரது வீட்டிற்கு வந்து அவருக்கு முத்தமிட்டு இரை வாங்கி செல்கிறது. மேலும், அவர் வீட்டில் இருக்கும் வரை அவருடன் விளையாடி பின்னர் அவர் சென்ற பிறகு பருந்தும் சென்று விடுகிறது.

இது குறித்து அனில்குமார் கூறுகையில், என் வீட்டுக்கு என்னை பார்க்க வரும் பருந்துக்காகவே நான், மீன், கோழி, இறைச்சி, கோழிக் குடல் போன்றவற்றை கடையில் வாங்கிக்கொண்டு வந்து அதனை பருந்துக்கு கொடுப்பேன். நான் அதிகாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது அந்த பருந்து எனக்காக மரத்தில் காத்துக்க்கொண்டிக்கும். என்னை பார்த்த பிறகு என்னிடம் வந்து முத்தம் கொடுத்து விட்டு நான் வைத்திருக்கும் உணவுகளை அது சாப்பிட்டு விட்டு செல்லும்.

மேலும், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இது நடந்து கொண்டிருக்கிறது. என் மீது அந்த பருந்து அமரும் போது எந்தளவிற்கு அந்த பருந்து என் மீது பாசமாக இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது என்று அனில்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Response