கேட்டவுடன் கிடைக்கும் இரயில் முன்பதிவு டிக்கெட்!…

suresh brabu
‘கேட்டவுடன் முன்பதிவு டிக்கெட் என்பது, வரும், 2020ல் சாத்தியமாகும்,” என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில், கடந்த, 10 ஆண்டுகளில், சரக்கு ரயில் போக்குவரத்துக்கான தேவை, 1,344 சதவீதமும், பயணியர் போக்குவரத்துக்கான தேவை, 1,642 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், புதிய ரயில் பாதைகள் அமைப்பது, 23 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

ரயில்வேயின் திறனை உயர்த்துவதற்கு, கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதே தீர்வாக இருக்கும். இதற்காக, 8.5 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். கடந்த, 70 ஆண்டுகளில், 20 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு மட்டுமே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதே நேரத்தில், இரண்டரை ஆண்டுகளில் மட்டும், 16,500 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வேக்கு கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, பயணியர் போக்குவரத்து மூலம் கிடைக்கிறது. அதே நேரத்தில், இரண்டு பங்கு கிடைக்கும் சரக்கு போக்குவரத்துக்கு என, தனிப் பாதை இல்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரும், 2019க்குள், சரக்கு ரயில் போக்குவரத்துக்கு என, தனி ரயில் பாதை அமைக்கப்படும். அதன் பின், ரயில்களில் கேட்டவுடன் டிக்கெட் கிடைக்கும் சூழ்நிலை, வரும், 2020ல் உருவாகும். என்று மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த
தலைவருமான சுரேஷ் பிரபு உறுதியளித்துளார்.

Leave a Response