பாகுபலி 2- விமர்சனம்

paagupali
படம்- பாகுபலி 2

கதை- வ.விஜேந்திர பிரசாத்
திரைக்கதை & இயக்கம்- ராஜமௌலி
தயாரிப்பு- சோபு யார்லகட்ட & பிரசாத் தேவிநேணி, இசை- மரகதமணி, வி.ஏப்.எக்ஸ்- RC களமல கண்ணன், சவுண்ட் டிசைன்- P.M. சதீஷ், ப்ரொடக்சன் டிசைனர்- சாபு சிறில், சண்டை பயிற்சி- கிங் சொலமன், லீ வ்ஹிட்டகர், கேசா கம்பக்டீ, நடனப்பயிற்சி- பிரேம் ரட்சித்,சங்கர், எடிட்டர்- கித்தகிரி வெங்கடேசா ராவ், ஆடை அலங்காரம்- ராம ராஜமௌலி, பிரசாந்தி, வசனம்- கார்கி,

நத்காதிரங்கள்- பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பட்டிய, ராணா டக்குபட்டி, சத்திய ராஜ், நாசர், ரம்யா கிறிஸ்ணன், சுப்பராஜு,

பாகுபலி -2 — நிச்சயமாக இந்த கோடை விடுமுறைக்கு குழு குளு தியேட்டருக்கு செல்ல மட்டுமல்ல மனசு குளுமையடைய ஒரு படம் ..பிரம்மாண்ட பிரமாதம். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற இரண்டு வருட கேள்விக்கு பதில் கிடைத்தது. ( ரசிகர்களே திருப்தியா?) அது போக தேவசேனா கைதான காரணம் .

சிவகாமி அம்மா குழந்தையை கையில் ஏந்தி காப்பாற்றிய காரணம் இப்படி பல விசேஷங்கள் உள்ளன். முதல் பாகம் படத்தில் அரங்க அமைப்புகளை விட இரண்டாம் பாகத்தில் பிரமிக்கவைத்த பாங்கு அருமை. அன்ன பறவை போல வரும் ஒரு படகு ( ஓர் ஊரில். பாடலில் ) வெள்ளை நிறத்தில் கொள்ளை கொள்ளும் அழகு.

சூழ்ச்சி செய்து தந்தை பாகுபலியை கொன்ற துரோகியை கொல்ல போரிடும் காட்சி கண்களை இமைக்கவிடாமல் பார்க்க செய்கிறது. அழகு அழகு மட்டுமல்ல சண்டை காட்சிகளிலும் அனுஷ்கா அம்ச( மக்கா) ம்.

ஒளிப்பதிவு, இசை, பின்னனி இசை, எடிட்டிங், குறிப்பாக சண்டை பயிற்சி சிறப்பாக அமைந்த பாகுபலி 2 கட்டப்பா சத்யராஜ் நாசரை ஒரே அடி( வாளால் ) அடிக்கும் காட்சி கைதட்டல்களை அள்ளும்.

வசூலிலும் பாகுபலி பலம் காட்டுவான்.

Leave a Response