மீண்டும் அட்டகத்தி தினேஷ் – நந்திதா இணையும் “உள்குத்து”

ulkuthu
அட்டகத்தி தினேஷ் இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார்.இவர் 2006ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2011ம் ஆண்டு ஆடுகளம் (திரைப்படம்) மற்றும் மௌன குரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இவர் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்த அட்டகத்தி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடித்ததான் மூலம் இவர் சிறந்த நடிகராக பல விருதுகளை வென்றார்.
2006 ஈ
2011 ஆடுகளம்
மௌன குரு
2012 அட்டகத்தி
2013 எதிர்நீச்சல்
2014 வாராயோ வெண்ணிலாவே
குக்கூ
திருடன் போலீஸ்

நந்திதா இவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். [1] எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். [2]. நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார்.

2008 நந்தா லவ்சு நந்திதா
2012 அட்டகத்தி
2013 எதிர்நீச்சல்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
2014 முண்டாசுப்பட்டி
2014 நளனும் நந்தினியும்
2015 புலி
2015 உப்பு கருவாடு

2012 -ல் அட்டகத்தி என்ற திரைப்படத்திற்கு பிறகு தினேஷும், நந்திதாவும் 5 வருடம் கழித்து மீண்டும் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் – ‘உள்குத்து’. அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார்.

முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

“தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், ‘நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்’ என்று தான் திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் கேட்கின்றார்கள்.

அதை நிரூபிக்கும் வண்ணமாக எங்களின் உள்குத்து திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும். எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘பி கே பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார்.

இந்த உள்குத்து அட்ட கத்தியை விட செம குத்தாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Response