7 வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கும் அஞ்சல பட நாயகி !

நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் நடிக்கும் படம், நர்மதா. திரைக்கதை எழுதி தயாரித்து, இயக்குனராக அறிமுகமாகிறார் கீதா ராஜ்புத்.

அவர் கூறுகையில்:-

‘ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் இப்படத்தின் கதை. இதில் கதையின் நாயகியாக வரும் நந்திதா ஸ்வேதா, 7 வயது சிறுவனின் தாயாக நடிக்கிறார்.

இதற்குமுன் நான், திருநங்கையைப் பற்றி என்னைத் தேடிய நான், காதலைப் பேசும் மயக்கம், காது கேளாத மற்றும் வாய் பேசாத சிறுவனை மையப்படுத்திய கபாலி ஆகிய குறும்படங்களை தயாரித்து இயக்கியுள்ளேன். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் உதவியாளராகப் பணியாற்றியுள்ளேன்’ என்றார்.

Leave a Response