ஒரு ஊரே புற்று நோயால் மடிகிறது…?

cancer
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனார் ஊற்று கிராமத்தில் , கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

புற்றுநோய் காரணமாக மரணமடைந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. வாய் புற்றுநோய் மட்டுமல்லாமல் மார்பக புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவையும் மக்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்துள்ளன.

தற்போதும் அந்த கிராமத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் புற்றுநோய் காரணமாக இந்த கிராமத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் அதிகம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு, மாசடைந்த தண்ணீர் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் இந்த கிராம மக்கள் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அந்த கிராமத்தினர் பயன்படுத்தி வரும் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்ற அரசு மருத்துவ குழுவினர் , தற்போது வரை ஆய்வு முடிவுகளை அறிவிக்கவில்லை.

புற்றுநோய்க்கான காரணம் என்ன? என்பது குறித்து தற்போது வரை கண்டறியப்படாததால், அந்த கிராமத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அய்யனார் ஊற்று கிராமத்தையே புற்றுநோய்க்கு பலி கொடுக்க வேண்டி இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இது போன்று ஒரு ஊரே புற்று நோயால் பதிக்க பாட்டு செத்து மடிவதை பார்த்து அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் முதலில் இருக்கிறதா. இருந்தால் இவ்வாறு நடப்பது ஏன். பின்னர் மேலே குறிப்பிட்டதுபோல் அந்த கிராமத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுத்து சென்ற அரசு மருத்துவ குழவினர் எங்கே அந்த நிலத்தடி நீரில் அப்படி என்ன இருக்கிறது. இதை மூடி மறைப்பதற்கு காரணம் என்ன…? இவ்வாறு அலட்சியம் காட்டுவதற்கு யார் காரணம்…?

அரசாங்கமா… அல்லது ….. பொதுமக்களா…………..

Leave a Response