நாளைமுதல் வெடிக்கும் 8 தோட்டாக்கள்…

yettu thotta
தற்போது கோலிவுட்டில் க்ரைம் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. க்ரைம் படங்களுக்கு ரசிகர்கள் அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு விருந்தாக தற்போது ‘8 தோட்டாக்கள்’ என்ற படம் தயாராகி நாளை வெளியாக்கிறது.

இது போலீஸ் ஸ்டேஷனில் ஒரு துப்பாக்கி, மர்மமான முறையில் காணாமல் போகிறது. இதில் இருக்கும், எட்டு தோட்டாக்களும், வெவ்வேறு இடத்தில் வெடிக்கின்றன. இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது தான், படத்தின் கதையாம்.

படத்தை மிஸ்கின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். படத்தில் வெற்றி என்பவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். படத்தில் கேரளாவைச் சேர்ந்த, அபர்ணா பாலமுரளி என்ற மலையாள நடிகை ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, அம்மா கிரியே‌ஷன் சிவா, சார்லஸ் விநோத், ஆர்.எஸ். சிவாஜி, தேனிமுருகன், மணிகண்டன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் நாளை திரைக்கு வருகிறது. அனைவரும் தியேட்டர்களில் சென்று பார்த்து மகிழுங்கள்.

Leave a Response