வானில் பிறந்த பெண் குழந்தை…

sd
வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்கு, வானில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக திகழ்வது பெரு. அது அமேசான் காடுகளுக்கும், மச்சு பிச்சுவிற்கும் புகழ் பெற்றது. அவ்வப்போது மழை பெய்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அது வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது. தொடர் மழையால் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வாகனங்களும், கடைவீதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து, அங்குள்ள வசிப்பிடங்களை மூழ்கடித்து வருகிறது.

வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மரியா பின்கோ என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நீர் சூழ்ந்து காணப்படும் இடத்திற்கு, ஹெலிகாப்டரில் விரைந்து அவர்கள் அப்பெண்ணை மீட்டுக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஹெலிகாப்டரிலேயே பெண் குழந்தை பிறந்தது.

Leave a Response