“டோரா” – திரை விமர்சனம்

maxresdefault (4)
நடிகர்கள்:லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா, சுலில் குமார்,
இயக்குனர்:தாஸ் ராமசாமி, கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், விவேக் மெர்வின் இசையில் வெளிவந்த படம் தான் டோரா.

இப்படத்தில் முன்பு தன் அப்பாவும் , குடும்பமும் செய்த உதவியால் பல கார்களுடன் கால்டாக்ஸி நிறுவனம் நடத்தி துட்டு பார்க்கும், தன் அத்தையும் , அத்தை வீட்டுக்காரரும் தனக்கும் , தன் அப்பாவுக்கும் தகுந்த மரியாதை தராததால் பொங்கி எழும் நயன்தாரா , தானும் ஒரு கால் டாக்ஸி முதலாளி ஆகி , அத்தை மாமா நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் என்று தன் அப்பா தம்பி ராமையாவை உசுப்பி விட்டு, இருந்த காசை எல்லாம் போட்டு பழைய மாடல் கார் ஒன்றை வாங்கி விடுகிறார்.

அந்தக் காருக்கும் அவருக்கும் மிகவும் பரிட்சையமான ஒரு எட்டு வயது சிறுமியின் ஆவி , தன்னை பலாத்காரம் செய்து அடித்துக் கொன்றவர்களை நயன் தாரா மூலமாகவும் , தான் வளர்த்து வந்த அந்த காம வெறி பிடித்த கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நாயின் மூலமாகவும், அந்தக் பழைய காலத்து காரை பயன்படுத்தி எப்படி விரட்டி , விரட்டி பழி தீர்க்கிறது என்பதுதான் இந்த ” டோரா ” படத்தின் மொத்த கருவாகும்.

இப்படம் தாஸ் இராமசாமியின் எழுத்தின், இயக்கத்தில், உருவாகியது

மொத்தத்தில் “டோரா” ஒரு அழகிய நயன் தாரா …. ஆனால் , மொத்தப் படமும் ‘ஜோரா ?’ என்பது ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!”

ஆகையால் அனைவரும் திருட்டு வி.சி.டி.வங்கி பார்க்காமல் திரை அரங்குகளில் சென்று பார்த்து மகிழுங்கள்.

Leave a Response