உத்தர பிரதேசத்தில் தடம்புரண்ட விரைவு ரெயில்: 12 பேர் படுகாயம்

uththira
உத்தரப்பிரதேசத்தின் மஹோபா ரயில் நிலையத்தின் அருகே ஜபல்பூர்- நிசாமுதீன் மகாகவுஷல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) காலை தடம் புரண்டன.

முதற்கட்டத் தகவலின்படி, பின்னிரவு 2.07 மணிக்கு ரயில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. 12 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடக்கு மத்திய ரயில்வே முதன்மை அதிகாரி, ”மஹோபா – குல்பகர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது. 8 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து முதலுதவி ரயில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

பயணிகளின் உறவினர்களுக்கு விபத்துத் தகவலைத் தெரிவிக்க ஜான்சி, பாந்தா, குவாலியர் மற்றும் நிசாமுதீன் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response