‘ஆசிட் குடித்த பெண்ணுடன் போலீஸ் எடுத்த செல்ஃபி’!…

selfie
உத்தரப்பிரதேசத்தில் ஆசிட் குடித்தப் பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இரண்டு பெண் போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலகாபாத் – லக்னோ இடையே செல்லும் கங்கா கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 45 வயதான பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது 2 ஆண்கள் வலுக்கட்டாயமாக அவரை ஆசிட் குடிக்க வைத்தனர். இதில் கதறித்துடித்த அவர் லக்னோ சார்பக் ரயில் நிலைய காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

அதில், இது என் மீது நடத்தப்பட்ட 4வது தாக்குதல். இதற்கு முன் லக்னோவிலிருந்து 100 கிமீ தொலையில் உள்ள உச்சகாரில் உள்ள எனது வீட்டில் சொத்து தகராறு காரணமாக, கடந்த 2009ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் வீசப்பட்டேன். 2012ம் ஆண்டில் கத்தியால் தாக்கப்பட்டேன். 2013ம் ஆண்டில் மீண்டும் ஆசிட் வீச்சுக்கு உள்ளானேன்
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவருடன் காவலுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பெண் போலீஸ் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தகவலறிந்த லக்னோ பிரிவு போலீஸ் உயர் அதிகாரி சதீஷ் கணேஷ் ரஜ்னி பாலா சிங் மற்றும் டைசி சிங் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கு நடைமுறையில் தான் உள்ளதா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்?…

Leave a Response