பிரபல பாலிவுட், ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஜார்கெண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.
இவரது தந்தை அசோக் சோப்ரா ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இதனால் நாட்டின் பல இடங்களுக்கு அடிக்கடி பிரியங்கா குடும்பம் இடம்பெயர்ந்தது. 2000-மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்று புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்.
அப்போது அவர் குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வந்தது. பரேலி தொகுதியின் 5வது வார்டு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருந்தது. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு பிரியங்கா சோப்ரா குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.
ஆனாலும் அவர்கள் பெயர் பரேலி தொகுதி வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருந்தது. பிரியங்கா குடும்பம் எந்த தேர்தலிலும் ஓட்டளிக்கவில்லை.
இதனால் உள்ளூரை சேர்ந்த ஒருவர், பிரியங்கா சோப்ரா பரேலி தொகுதியிலும் இல்லை. அவர் ஓட்டளிப்பதும் இல்லை. இதனால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் பிரியங்கா சோப்ரா, மற்றும் அவரது தாய் மது சோப்ரா ஆகியோரின் பெயரை வாக்களார் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிவிட்டது.
தந்தை அசோக் சோப்ரா 4 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டதால் அவரது பெயர் ஏற்கெனவே வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.