‘தமிழக விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியில் இல்லை தமிழகத்தில்’ :- பொன் ராதாகிருஷ்ணன்…

pon radhakrishnan
தமிழக விவசாயிகள் போராட வேண்டியது டெல்லியில் இல்லை தமிழகத்தில் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 15நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போராட்டம் குறித்து மத்திய அரசு ஏன் கண்டு கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பொன் ராதா கிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

டெல்லியில் 15வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ’காரிஃப் பயிர் நிலைமை குறித்து நவம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை மத்திய அரசிற்கு தந்திருக்க வேண்டும். அதுகுறித்த விவரம் தங்களுக்கு தெரியுமா ?விவரமான அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? அப்படியெனில் இவர்கள் போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

விவசாயிகள் தற்கொலை 400 க்கும் மேல் தமிழகத்தில் நடந்துள்ளது எனில் எத்தனை வழக்குகள் அதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. என பல கேள்விகளை பொன் ராதாகிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில் பல கேள்விகளை தொடுத்துள்ளார்…

Leave a Response