‘ புதிதாய் உருவாகும் தனியார் பயணிகள் ரயில்’!..

rail
சரக்கு ரயில்­க­ளுக்­கான தனி வழித்­த­டம் அமைக்­கும் திட்­டம் செயல்­பாட்­டிற்கு வந்­த­பின், பயன்­பாடு குறை­யக்­கூ­டிய பொது ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­களை இயக்க, தனி­யா­ருக்கு அனு­மதி வழங்­கு­வது குறித்து, இந்­திய ரயில்வே ஆலோ­சித்து வரு­கிறது.பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்து வாயி­லான வரு­வாய் குறைந்து வரு­வதை சமா­ளிக்க, இத்­திட்­டம் உத­வும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இந்­திய ரயில்வே, டி.எப்.சி.சி.ஐ.எல்., என்ற பொதுத் துறை நிறு­வ­னத்­தின் கீழ், சரக்கு ரயில்­க­ளுக்­கென, பிரத்­யேக சரக்கு ரயில் தடங்­கள் அமைக்­கும், ‘தனி சரக்கு ரயில் தடம்’ என்ற திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கிறது.

சென்னை – டில்லி; சென்னை – கோவா; மும்பை – ஹவுரா மற்­றும் ஹவுரா – விஜ­ய­வாடா ஆகிய நான்கு சரக்கு ரயில் தடங்­களின் ஆய்வு முடி­வ­டைந்து, இன்­னும் பணி­கள் துவக்­கப்­ப­டா­மல் உள்ளன.தற்­போது, பொது ரயில் தடத்­தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும், சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்­தில், 70 சத­வீ­தம், தனி சரக்கு ரயில் தடத்­திற்கு மாறும் என்று மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

ஆடம்பர ரயில்கள்அத­னால், பொது ரயில் தடத்­தில், மேலும் அதிக ரயில்­களை இயக்­க­வும், பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்தை விரை­வாக மேற்­கொள்­ள­வும் வழி பிறக்­கும்.அத்­த­கைய சூழ­லில், போக்­கு­வ­ரத்து குறை­யும் ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­கள், ஆடம்­பர ரயில்­கள், சரக்கு பெட்­டக ரயில்­கள் ஆகி­ய­வற்­றின் போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்ள, தனி­யா­ருக்கு அனு­மதி அளித்து, வரு­வாய் ஈட்ட, இந்­திய ரயில்வே பரி­சீ­லித்து வரு­கிறது. ரயில் தடங்­களின் திறனை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக் கொள்ள உத­வும் இத்­திட்­டம் குறித்த சாத்­தி­யக்­கூ­று­களை ஆராய்ந்து, அறிக்கை அளிக்­கும் பொறுப்பு, ஆலோ­சனை நிறு­வ­னம் ஒன்­றி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது.

மொத்த வரு­வாய்நடப்பு நிதி­யாண்­டில், இந்­திய ரயில்­வே­யின் மொத்த வரு­வாய், 1.17 லட்­சம் கோடி ரூபா­யாக இருக்­கும். இதில், பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்து வரு­வாய், கடந்த நிதி­யாண்­டின் இலக்கை விட, சற்று குறைந்து, 50,125 கோடி ரூபாயை எட்­டும். வரும், 2017 – 18ம் நிதி­யாண்­டில், இந்­திய ரயில்­வே­யின் வரு­வாய், மிகப்­பெ­ரிய மாற்­ற­மின்றி, 1.18 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கே இருக்­கும் என்று மதிப்­பி­டப்­பட்டிருக்கின்றன…

Leave a Response